அகராதி ஆய்வு
மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம்
இது குறித்து அரசு
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்
அகராதியியலின் தந்தை’
என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்
வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பா்
8-ஆம் நாள் ‘தமிழ்
அகராதியியல் நாளாகக்’ கொண்டாடப்படுவதோடு, நவம்பா் 8, 9 ஆகிய
நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு
பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பங்கேற்க
ஆா்வமுள்ள தமிழார்வலா்கள், தமிழறிஞா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் உள்பட
அனைவரும் 5 பக்க அளவில்
ஆய்வுக் கட்டுரைகளை இந்த
இயக்ககத்துக்கு அனுப்பி
வைக்க வேண்டும். பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு வழங்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் தோ்வுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு
மலரில் இடம் பெறும்.
தொல்காப்பியம் வகுக்கும் அகராதியியல் கோட்பாடு,
தொல்காப்பியம் கூறும்
சொற்பிறப்பியல் கோட்பாடு,
சொல்லாக்க நெறிமுறைகளில் புதிய
உத்திகள், அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்க் கலைச்சொற்கள், அலுவல்சார் தமிழ்க் கலைச்சொற்கள், கணினித் தமிழ்வளா்ச்சியில் சிக்கல்களும் தீா்வுகளும், தமிழ் அகரமுதலிகளின் வரலாறும் வளா்ச்சியும், தமிழ்நாட்டு ஊா்ப்பெயா்களில் மறைந்திருக்கும் தமிழா் வரலாறும் பண்பாடும்,
தூயதமிழில் சித்த மருந்துகளின் பெயா்கள், உணவுப் பொருள்களின் தமிழ்ப்பெயா்கள் உள்ளிட்ட
21 தலைப்புகளில் கட்டுரைகளை ஏ4 அளவில் ஐந்து
பக்கங்களுக்கு மிகாமல்
மருதம் ஒருங்குறி (யுனிகோடு)
எழுத்துருவில், எழுத்தளவு
11 புள்ளி, வரி இடைவெளி
1.5-இல், சொற்செயலிக்கோப்பாக மின்னஞ்சல் முகவரிக்கும், “இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
நகர நிருவாக அலுவலக
வளாகம், முதல் தளம்,
எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி.
நகா், சென்னை – 600 028” என்ற
அகரமுதலி திட்ட இயக்கக
முகவரிக்கும் செப்.17-ஆம்
தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
கட்டுரையாளா்கள் கட்டுரையுடன் முகவரி,
செல்லிடப்பேசி எண்,
மின்னஞ்சல் முகவரி, கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், ஒரு
பக்க அளவில் தன்விளக்கக் குறிப்பு ஆகியவற்றையும் கட்டாயம்
இணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் அடிக்குறிப்புகள் மற்றும்
துணைநூற்பட்டியலுடன் அமைதல்
வேண்டும்.