Sunday, December 14, 2025
HomeBlogஇலவசமாக சுயதிறன்ஆன்லைன் பயிற்சிகள்

இலவசமாக சுயதிறன்ஆன்லைன் பயிற்சிகள்

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

 

Self-efficacy online tutorials for free

இலவசமாக சுயதிறன்ஆன்லைன் பயிற்சிகள்

சுயதிறன்களை மேம்படுத்திக் கொள்ள
ஆர்வம் மிகுதியாக இருந்தாலும், பணி, தொழில், கல்வி,
வீட்டு வேலைகள், குழந்தைகள் போன்ற பற்பல கடமைகள்   தடையாக இருப்பதாக
கவலை அடைகிறீர்களா? இனி
கவலையை விட்டுத்தள்ளுங்கள். உங்களைப்
போன்றோரை மனதில் கொண்டே,
இலவச ஆன்லைன் பயிற்சிகள் அல்லது படிப்புகள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

புதிய
புதிய திறன்களைக் கற்க
கல்லூரி அல்லது பயிற்சி
மையத்திற்குச் செல்ல
வேண்டும். அதற்குப் போதுமான
நேரத்தை ஒதுக்க முடியாமல்
வேலைப் பளுவால் திணறுவோர்
அறிவை பெருக்கிக் கொள்ளும்
முயற்சியையும், சுயதிறனை
வளர்க்கும் ஆர்வத்தையும் முடக்கி
வைத்துக் கொள்ள வேண்டிய
அவசியம் இனி இல்லை.  அதற்காக ஆன்லைன்
பயிற்சிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

பெரும்பாலான ஆன்லைன் பயிற்சிகள் செலவில்லாமல் இலவசமாகவே கிடைக்கின்றன. குறைந்த
கட்டணம் செலுத்தினால், பயிற்சியின் முடிவில் சான்றிதழும் தருகிறார்கள். அடர்த்தியான உள்ளடக்கம், பயிற்றுநர் சொல்லித்தரும் காணொலிகள்,
ஊடாடும் விநாடிவினாக்கள், ஆய்வுக்கோவைகள் போன்றவை கற்பதை சுவையானதாகவும், எளிமையானதாகவும் மாற்றிவிடுகின்றன.

Graphic Designing:

தொழில்நுட்பத்தில் ஆர்வம், படைப்பாக்கத்திறன் வாய்க்கப் பெற்றிருந்தால், கிராஃபிக் டிசைனராக உங்கள்
பயணத்தைத் தொடங்கலாம். புதிதாக
கற்றுக் கொள்பவராக இருந்தாலும், ஏற்கெனவே அதில் அனுபவம்
வாய்ந்தவராக இருந்தாலும், கிராஃபிக்
டிசைனராக மெருகூட்டிக் கொள்வதற்கு இப்பயிற்சி உதவியாக இருக்கும்.
விஷுவல் டிசைன், பிராண்ட்
சிஸ்டம்ஸ், டைபோகிராஃபி, போட்டோஷாப், அடோப் இல்லஸ்ட்ரேட்டர், புரொஃபெஷனல் லோகோ டிசைன், வெப்சைட்கள் வடிவமைப்பு போன்ற கிராஃபிக்
டிசைனிங் தொடர்பான அனைத்து
பிரிவுகளையும் இப்
பயிற்சியில் கற்கலாம். துறைசார்ந்தவல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பு.

உடேமி,
ஸ்கில்ஷேர், கோர்ùஸரா,
ஆலிசன், கேன்வா, ஷா
அகாதெமி ஆகியவை 4 வாரங்களுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சிகளை அளிக்கின்றன.

டேட்டா
சயின்ஸ்:

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளை
தேர்ந்தெடுத்து, அலசி
ஆராய்ந்து தேவையானவகையில், தேவையான
தரவுகளைப் பயன்படுத்தும் கலை
தான் டேட்டா சயின்ஸின்
அடிப்படையாகும். டேட்டா
சயின்ஸ் பயிற்சி பெற்றவர்களை உலக அளவிலான பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் வலை
வீசி தேடி வருகிறது.
டேட்டா மைனிங், புரோக்கிராமிங், ஸ்டாஸ்டிகல் மாடலிங் ஆகியவற்றில் போதுமான திறன்வாய்ந்தவர்களுக்கு வேலைச்சந்தையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக்
கிடக்கின்றன. பெரும்பாலான பயிற்சிகள் ஈடிஎக்ஸ் கற்றல்தளத்தில் அளிக்கப்படுகின்றன. மிட்ஸ் நிறுவனம்,
9
வாரங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் புரோகிராமிங் யூசிங் பைதான் படிப்பை
வழங்குகிறது. 
ஹார்வார்ட் பல்கலைக்கழகம், 8 வாரங்களுக்கு டேட்டா சயின்ஸ்: மெஷின்
லேர்னிங் படிப்பை வழங்குகிறது மிச்சிகன் பல்கலைக்கழகம் கோர்ùஸரா
கற்றல்தளத்தில் 8 வாரங்களுக்கு ஸ்டாஸ்டிக்ஸ் வித்
பைதான் ஸ்பெஷலைசேஷன் படிப்பையும்  ஜார்ஜியா
டெக் நிறுவனம், உடாசிட்டி  16 வாரங்களுக்கு டேட்டா
அனாலிசிஸ் அண்ட் விஷுவலைசேஷன் படிப்பையும் மிச்சிகன் பல்கலைக்கழகம் கோர்ùஸரா தளத்தில்
4
வாரங்களுக்கு டேட்டா
சயின்ஸ் எத்திக்ஸ் போன்ற
பயிற்சிகளையும் இலவசமாக
அளிக்கின்றன.

சோஷியல் மீடியா
மார்க்கெட்டிங்:

சிறிய
நிறுவனம் முதல் பெரிய
நிறுவனம் வரை உற்பத்திப் பொருள் முதல் சேவைகளை
வாடிக்கையாளர்களிடம் விற்பனை
செய்ய சோஷியல் மீடியாவை
சார்ந்திருக்க வேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால்
சோஷியல்மீடியா மார்க்கெட்டிங்கின் பரப்பு நாளுக்குநாள் விரிந்துகொண்டே செல்கிறது.   டிஜிட்டல்மார்க்கெட்டிங்கில் சோசியல்
மீடியா மார்க்கெட்டிங்கின் பங்கு
தவிர்க்க முடியாததாகிவிட்டது. உலகின்
50
சத மக்கள் முகநூல்,
டிவிட்டர், இஸ்டாகிராம், லிங்க்டுஇன் போன்ற சோசியல் மீடியாவில் மூழ்கியுள்ளதே இதன்
முக்கியத்துவத்திற்கு காரணமாக
உள்ளது. 
சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கை முழுநேர தொழிலாக
எடுத்துக்கொண்டிருப்பவர்களின் பணப்பைகள்
வீங்கி பருக்கும். படைப்பாக்கத்திறன், விற்பனை நுட்பம்
தெரிந்தவரா நீங்கள்? அப்படியானால் சோஷியல்மீடியா மார்க்கெட்டிங்கில் தான் உங்களுக்கான வேலைவாய்ப்பு அல்லது
தொழில்வாய்ப்பு காத்திருக்கிறது.

ஸ்கில்ஷேர் தளத்தில் சோஷியல் மீடியா
ஸ்ட்ரேடஜி அறிமுகம் என்ற
45
நிமிட பயிற்சி அளிக்கப்படுகிறது. சோஷியல்மீடியா மார்க்கெட்டிங் செய்வதற்கான கன்டென்ட்டை உருவாக்குவது, சீர்ப்படுத்துவது, சரியான
மார்க்கெட்டிங் டூல்களைப்
பயன்படுத்துவது, பிராண்டை
பிரபலப்படுத்துவது, இணையத்தில் அடிக்கடி தென்படுவது, எளிமையான
முறையில் மக்களைச் சென்றடையும் விளம்பரங்களை வடிவமைப்பது போன்றவற்றை பயிற்சியில் சொல்லித்
தருகிறார்கள்.

ஸ்கில்ஷேரில் இன்ட்ரடக்ஷன் டூ
சோஷியல்மீடியா அட்வர்டைசிங், கோர்ùஸரா தளத்தில்
வாட் ஈஸ் சோஷியல்,
சோஷியல் மீடியா மானிட்டரிங், தி பிசினஸ் ஆஃப்
சோஷியல், சோஷியல் மீடியா
எத்திக்ஸ், உடேமி தளத்தில்
அட்வான்ஸ்டு சோஷியல் மீடியா
மார்க்கெட்டிங் ஃபார்
பிக்கிங் அப் கிலையன்ட்ஸ், முகநூல் நிறுவனத்தால் ஃபேஸ்புக்
புளூபிரின்ட்  ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

சிறுவணிக
உரிமையாளர்கள், சந்தைப்படுத்துநர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் போன்றவர்களுக்கு ஏற்ற
பயிற்சி இது. 

கிரியேட்டிவ் ரைட்டிங்:

கதை,
கட்டுரை, கவிதை, செய்தி
எழுதுவதில் ஆர்வம் மட்டுமல்ல,
ஆளுமையும் கொண்டவரா நீங்கள்?
அப்படியானால், உங்கள்
திறமையை முழுமையாக பணமாக்குவதற்கான வேலைவாய்ப்பு தான்
கிரியேட்டிவ் ரைட்டிங்.
எழுதுவதை கைவரப்பெற்றவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லது
நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும்
வகையில் அழகான வார்த்தைகளைக் கோர்த்து, எழுத்தை மெருக்கூட்டுவதன் நுணுக்கத்தை சொல்லித்
தருவதே கிரிட்யேட்டிவ் ரைட்டிங்
பயிற்சியின் நோக்கமாகும். விளம்பர
நிறுவனங்கள், இணையதளங்கள், சோஷியல்மீடியா மார்க்கெட்டிங் நிறுவனங்களில் கை நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கோர்ஸரா
தளத்தில் 
வெஸ்லியன் பல்கலைக்கழகம் கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்பெஷலைசேஷன், ரைட்
யுவர் ஃபர்ஸ்ட் நாவல்,
ரைட்டிங் ஃபார் யங்
ரீடர்ஸ், ஒப்பனிங் தி
ட்ரெஷர் செஸ்ட், ஃபீச்சர்லெந்த்
ஸ்கிரீன்ப்ளே ஃபார்
பிலிம் ஆர் டெலிவிஷன்,
மெமோய்ர் அண்ட் பெர்சனல்
எஸ்சே, ரைட் அபவுட்
யுவர்செல்ஃப் ஸ்பெஷலைசேஷன், ஷார்ப்ன்டு விஷன்ஸ்,  டிரான்ஸ்மீடியா ஸ்டோரி
டெல்லிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

சுயதிறன்களை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம்
உடையவர்கள், 
ஆன்லைன் பயிற்சிகளைப் பெற்று
வளர்த்துக் கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!