அறநிலையத்துறை செயல்
அலுவலர் தேர்வு
ஹிந்து
அறநிலையத் துறையில், செயல்
அலுவலர்களை தேர்ந்தெடுக்க, போட்டி
தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறநிலையத்
துறையில், செயல் அலுவலர்
நிலை – 3 பதவியில், 42 காலியிடங்களை நிரப்ப, செப்டம்பர் 10ம்
தேதி எழுத்து தேர்வு
நடத்தப்படும். கட்டாய
தமிழ் தகுதி மற்றும்
பொது பாடங்கள் பிரிவுக்கு காலையிலும், ஹிந்து மதம்
மற்றும் சைவமும், வைணவமும்
தொடர்பான பிரிவுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, குறைந்தபட்சம், 25 வயது நிறைவடைய வேண்டும்.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, ஓய்வு வயதான, 60 முடியாமல்
இருக்க வேண்டும். பொதுப்
பிரிவினர், 37 வயதுக்குள் இருக்க
வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, வயது வரம்பு சலுகை
உள்ளது.
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று
துவங்கியது; ஜூன் 17ம்
தேதி வரை அவகாசம்
உண்டு. கலை அறிவியல்,
வணிகவியல் என, ஏதாவது
ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பி.ஏ., இந்திய
வரலாறு மற்றும் மத
நிறுவனங்கள் மேலாண்மை படிப்பு,
இந்திய கல்வெட்டியல் கல்வி
நிறுவனத்தில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியலில் ‘டிப்ளமா‘
படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உளவியலாளர் தேர்வு
சிறைத்
துறையில் உளவியலாளர் பதவியில்,
நான்கு காலியிடங்களை நிரப்ப,
கணினி வழி தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்
6ல் தேர்வு நடத்தப்படும். இதற்கான ‘ஆன்லைன்‘ பதிவு
துவங்கியுள்ள நிலையில்,
ஜூன் 16 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


