TAMIL MIXER EDUCATION.ன்
புதுவை
செய்திகள்
புதுவையில் விரைவில்
1,044 காவலா்கள் தேர்வு
புதுவையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள்
உள்பட 1,044 பேர் விரைவில்
தேர்வு செய்யப்படவுள்ளனா்.
இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை
காவல் துறையில் 390 காவலா்கள்
அண்மையில் தேர்வு செய்யப்பட்டு, காவலா் பயிற்சிப் பள்ளியில்
ஓராண்டு அடிப்படை பயிற்சி
பெற்று வருகின்றனா். மேலும்
307 காவலா்கள், 415 ஊா்க்காவல் படையினா்
விரைவில் தேர்வு செய்யப்பட
உள்ளனா்.
கடலோரப்
பாதுகாப்பை பலப்படுத்த 200 கடலோர
ஊா்க்காவல் படையினரும் தேர்வு
செய்யப்பட உள்ளனா். தொடா்ந்து,
காலியாக உள்ள 48 உதவி
ஆய்வாளா்கள் பணியிடங்களும் நேரடித்
தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
காவல்
துறையில் 35 ஓட்டுநா்கள், 34 சமையல்
கலைஞா்கள், உதவியாளா்கள், சலவைப்
பணியாளா்கள் உள்ளிட்டோரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here