இணைய வழியில்
அறிவியல் வினாடி–வினா
போட்டி
கோவை–மத்திய
அரசின் சார்பில், பள்ளி
மாணவர்கள் மத்தியில் அறிவியல்
கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை
ஏற்படுத்த, இணைய வழியிலான,
வினாடி–வினா போட்டி,
வரும் நவ., 30ம்
தேதி நடக்கிறது.
இதற்கு
முன்பதிவு செய்ய, அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.மத்திய
அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப துறையின் கீழ்
இயங்கும், விஞ்ஞான் பிரச்சார்
நிறுவனம், விபா நிறுவனம்
மற்றும் மத்திய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம்
இணைந்து, தேசிய அளவில்,
அறிவியல் விழிப்புணர்வு தேர்வு,
ஆண்டுதோறும் நடத்துகிறது.மாணவர்கள்
மத்தியில், அறிவியல் ஆராய்ச்சி
துறையில் ஈடுபாட்டை அதிகரிக்க,
இப்போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான போட்டி, வரும் நவ.,
30 மற்றும் டிச., 5ம்
தேதி நடக்கிறது.இணையதளவழியில் நடக்கும் இத்தேர்விற்கு, ஸ்மார்ட்
போனிலே பங்கேற்கலாம். புத்தகத்தை திறந்து எழுதவும், அனுமதி
அளிக்கப்படுகிறது. ஆங்கிலம்
தவிர, தமிழ், இந்தி,
தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய
மொழிகளிலும், தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளி
அளவிலோ, தனித்தேர்வர்களாகவோ பங்கேற்க,
www.vvm.org.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் நுாறு
ரூபாய்.தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் அக்.,30ம்
தேதி இறுதி நாள்.
ஒன்றரை மணி நேரம்
நடக்கும் இத்தேர்வில், 50 சதவீத
கேள்விகள், பாடப்புத்தகத்தில் இருந்தே
கேட்கப்படுகிறது.தேர்வுக்கான சிலபஸ் உள்ளிட்ட, கூடுதல்
விபரங்கள் பெற, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில
ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பிரானை, 87782 01926 என்ற
எண்ணிலோ அல்லது vvmtamilnadu@gmail.com Email
முகவரியிலோ, தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி,
மாவட்ட, மண்டல, மாநில,
தேசிய அளவில் நடக்கும்,
இப்போட்டியில் வெற்றி
பெறுவோருக்கு, ஊக்கத்தொகையோடு, சான்றிதழ், கேடயம் வழங்கப்படுகிறது. இதோடு, அறிவியல் துறை
சார்ந்த கருத்தரங்குகளில், பங்கேற்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்.