தமிழகத்தில் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்
8 முதல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் CORONA பரவல் காரணமாக
ஏற்கனவே 9 முதல் 11ம்
வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு பள்ளிகளில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த உத்தரவு
வரும் வரை நேரடி
வகுப்புகள் நடைபெறாது என
அரசு அறிவித்தது.
மேலும்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் வழக்கம்
போல தொடரும் என
தெரிவிக்கப்பட்டது. இன்று
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பள்ளிகள்
வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டு உள்ளது.
இதனால்
12ம் வகுப்பு மாணவர்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்தில் மாதிரி பொதுத்தேர்வுகள், செய்முறை
தேர்வுகள் நடைபெற உள்ளது.
எனவே விரைந்து நேரடி
வகுப்புகளை தொடங்க வேண்டிய
நிலை உள்ளது. இன்று
வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து பள்ளிகள் கிருமிநாசினி தெளித்து
முழுவதுமாக சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ள ஆசிரியர்களும் பணிக்கு
திரும்புவது கடினம்.
எனவே
12ம் வகுப்பிற்கு வருகின்ற
ஏப்ரல் 8ம் தேதி
முதல் பள்ளிகளை திறந்து
நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தற்போது கொரோனா
நோய்த்தொற்று வேகமாக
பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாவட்ட
கல்வி அலுவலர்கள், தலைமை
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.