Join Whatsapp Group

Join Telegram Group

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

By admin

Updated on:

முன்னாள் படைவீரர்
குழந்தைகளுக்கு கல்வி
உதவித்தொகை

தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த
முதல் பட்டப்படிப்பு மற்றும்
மேற்படிப்பு படிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு
ஆண்டும் பிரதமரின் கல்வி
உதவித்தொகை திட்டத்தின் கீழ்
மாணவர்களுக்கு 30,000 ரூபாய்
கல்வி உதவித்தொகையும், மாணவிகளுக்கு 36,000 ரூபாய் கல்வி
உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் 2020-2021ஆம்
ஆண்டிற்கான இந்த கல்வித்தொகையை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னதாக
மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கால
அவகாசம் பிப்ரவரி மாதம்
28
ஆம் தேதி என
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த
கால அவகாசம் தற்போது
நீட்டிக்கப்பட்டு ஏப்ரல்
30
ஆம் தேதி வரை
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
தேதிக்குள் மாணவர்கள் தங்களது
விண்ணப்பங்களை செலுத்தி
கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த
முன்னாள் படைவீரர்களின் சிறார்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற
+2
மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக
அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட முன்னாள்
படைவீரர் அலுவலகத்துக்கு அனுப்பிக்க வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது
குறித்து மேலும் தெரிந்து
கொள்ள முன்னாள் படைவீரர்
நல உதவி இயக்குனர்
அலுவலகத்தை தொடர்பு கொள்ள
04286 233079
எண்ணை பயன்படுத்தலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]