வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை திட்டம்
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு அரசு
சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் சென்னை
கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக
பலர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத
வகையில் தமிழக அரசு
சார்பில் வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்த
திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 10.ஆம் வகுப்பிற்கு கீழ்
பயின்றவர்களுக்கு ரூ.200
உதவித்தொகையும், 10.ஆம்
வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300
உதவித்தொகையும், 12.ஆம்
வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400
உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
மேலும்
மாற்றுத்திறனாளிகள் 10 ஆம்
வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12.ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000
உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக
பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in/
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவினர்கள் 2020ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் 31 ஆம் தேதி
வரை 40 வயதிற்கு மிகாமலும்,
மற்ற பிரிவினர் 45 வயதிற்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


