Wednesday, August 13, 2025
HomeBlogவேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்

வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்

 

வேலை வாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை வழங்கும்
திட்டம்

தமிழக
அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என
திருச்சி மாவட்ட கலெக்டர்
தெரிவித்துள்ளார்.

தமிழக
அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும்
உதவித்தொகை வழங்கி வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ்
காரணமாக பலர் வேலையிழந்த சூழ்நிலையில் இந்த
உதவித்தொகை பெரும் உதவியாக
இருக்கும்.

இந்த
திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 9 ஆம் வகுப்பு படித்து
10
ஆம் வகுப்பு தேர்ச்சி
பெறாதவர்களுக்கு ரூ.200/-
உதவித்தொகையும், 10 ஆம்
வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300/-
உதவித்தொகையும், 12 ஆம்
வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400/-
உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.600/- வழங்கப்படுகிறது. மேலும்
மாற்றுத்திறனாளிகள் 10 ஆம்
வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600/- உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750/- உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-
உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர்
45
வயதுக்குள்ளும், இதர
பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க
வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச
குடும்ப வருமானம் ரூ.72
ஆயிரத்துக்கு மிகாமல்
இருக்க வேண்டும். அரசு
சார்ந்த ஏதேனும் உதவித்தொகை பெறுபவர்கள் இந்த உதவித்தொகை பெற இயலாது. இந்த
உதவித்தொகை பெறுபவர்கள் எந்த
கல்வி நிறுவனத்திலும் பயிலக்
கூடாது.

ஏற்கனவே
3
ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்
மற்றும் பொறியியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம்
போன்ற தொழில் பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற
தகுதியில்லை.

உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக
அடையாள அட்டை, அசல்
பள்ளி, கல்லூரி மாற்றுச்
சான்றிதழ் மற்றும் அசல்
குடும்ப அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக
பெற்று பூர்த்தி செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://tnvelaivaaippu.gov.in/

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular