வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை
சென்னை: தமிழக அரசு
சார்பில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில்,
10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றோர் மற்றும் பெறாதோர்,
பிளஸ் – 2, பட்டப்படிப்பு படித்து,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ள
வேலை வாய்ப்பற்றோர், சாந்தோம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு,
விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.
அதேநேரம் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், கிண்டியில் உள்ள
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், உரிய விண்ணப்பத்தை பெற்று
விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே,
உதவித்தொகை பெற்று வரும்
பயனாளிகளில், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதிமொழியுடன் உரிய
ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.