Join Whatsapp Group

Join Telegram Group

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை – திருவண்ணாமலை

By admin

Updated on:

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகைதிருவண்ணாமலை

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல்
இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் அடிப்படையில் தமிழக
அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது.

உதவித்தொகையானது 10ஆம் வகுப்பு தேர்ச்சி
முதல் பட்டப்படிப்பு வரை
தேர்ச்சி பெற்ற மற்றும்
தோல்வி அடைந்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த
உதவித்தொகையை பெற
விரும்புபவர்கள் அந்தந்த
மாவட்டங்களில் உள்ள
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறையில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளுக்கு 1 ஆண்டும்
,
மற்றவர்களுக்கு குறைந்தது
5
வருடமும் முடிவடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் எந்தவித அரசு
அல்லது தனியார் துறையில்
பணிபுரிய கூடாது. மேலும்
வயது வரம்பு SC, ST பிரிவினருக்கு 45, இதர பிரிவினருக்கு 40 வயதும்,
மாற்றுத் திறனாளிகளுக்கு வயது
வரம்பு இல்லை என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி
10
ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 300 ரூ,
தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூ,
12
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 400 ரூ
மற்றும் பட்டதாரிகளுக்கு 1000 ரூ
வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மாற்றுத்
திறனாளிகளில் 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
மற்றும் பெறாதவர்களுக்கு 600 ரூ,
12
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 750ரூ
மற்றும் பட்டதாரிகளுக்கு 1000ரூ
உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த
உதவித்தொகை பெறக்கூடிய அறிவிப்பானது தற்போது திருவண்ணாமலை மாவட்ட
ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே
திருவண்ணாமலையை சேர்ந்த
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற
இணையதள முகவரியில் உள்ள
படிவத்தை பூர்த்தி செய்து
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறையில் அளிக்கலாம்.

அவ்வாறு
அளிக்கப்படும் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும்
வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து வரும் பிப்ரவரி
28
க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]