HomeBlogவேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை-தர்மபுரி

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை-தர்மபுரி

 

Scholarship for the Unemployed-Dharmapuri

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகைதர்மபுரி

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு
சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்
இந்த உதவித்தொகை பெற
விருப்பமுள்ளவர்கள் வருகிற
31
ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை
ஒவ்வொரு
ஆண்டும்
வழங்கப்படுகிறது. இதன்படி
மாதந்தோறும்
10
ஆம்
வகுப்பிற்கு
கீழ்
பயின்றவர்களுக்கு ரூ.200
உதவித்தொகையும், 10 ஆம்
வகுப்பு
பயின்றவர்களுக்கு ரூ.300
உதவித்தொகையும், 12 ஆம்
வகுப்பு
பயின்றவர்களுக்கு ரூ.400
உதவித்தொகையும் , பட்டதாரிகளுக்கு ரூ.600
வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம்
வகுப்பிற்கு
கீழ்
பயின்றவர்களுக்கு ரூ.600
உதவித்தொகையும், 12 ஆம்
வகுப்பு
பயின்றவர்களுக்கும் ரூ.750
உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000
உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக
பதிவு
செய்திருக்க
வேண்டும்.
மேலும்
அதனை
புதுப்பிக்க
வேண்டும்.

31.12.2020 ஆண்டுக்கான உதவித்தொகை
பெற
தகுதி
முடிவடைந்த
நிலையில்
இந்த
ஆண்டிற்கு
தகுதி
உள்ளவர்கள்
https://tnvelaivaaippu.gov.in/
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் SC/ST பிரிவினர்கள் 2020 ஆம் ஆண்டு
டிசம்பர்
மாதம்
31
ஆம்
தேதி
வரை
40
வயதிற்கு
மிகாமலும்,
மற்ற
பிரிவினர்
45
வயதிற்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.

மேலும் விண்ணப்பிப்பவர்கள் பள்ளி,
கல்லூரிகளில் நேரடியாக
பயில
கூடாது.
மாறாக
அஞ்சல்
முறையில்
படித்திருக்க வேண்டும்.
அஞ்சல் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல்,
மருத்துவம், விவசாயம், கால்நடை
அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையை பெற
முடியாது. இந்த உதவித்தொகை பெற முதன்முதலாக விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி
கணக்கு புத்தக நகலை
இணைத்தது வருகிற 31-ஆம்
தேதிகுள் அனுப்ப வேண்டும்.

தர்மபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 3 ஆண்டுகளாக
இந்த உதவித்தொகை பெறுவோர்,
2020-2021
ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற சுயஉதவி ஆவணத்தை
வருகிற 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!