ஆன்லைன் மோசடி
குறித்து SBI கடும் எச்சரிக்கை
SBI வங்கியின்
பெயரில் போலி SMS–கள்
மூலம் லிங்குகளை அனுப்பப்படுவதாகவும், அதனை நம்பி
வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என SBI வங்கி
எச்சரித்துள்ளது.
வங்கிச்
சேவைகள் கடந்த சில
ஆண்டுகளாக பெருமளவு எளிதாக்கப்பட்டுவிட்டது. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால்போதும், நொடிப்பொழுதில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்துவிடலாம். புகார்கள் இருந்தாலும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி
தொலைபேசி வாயிலாகவே தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக, நெட் பேங்கிங்கிற்கு பதிலாக இப்போது மொபைல்
பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் எளிதாக
இருக்கிறது. Google
Pay,
Phone Pay, Paytm,
SBI Yono செயலிகள் மூலம் இருக்கும்
இடத்தில் இருந்து பரிவர்த்தனைகளை செய்துவிடுகின்றனர்.
இந்த
பரிவர்த்தனைகளை தான்
ஆன்லைன் மோசடி கும்பல்
குறி வைக்கிறது. போலியான
SMS.கள் அனுப்பி,
அதில் இருக்கும் லிங்குகளை
கிளிக் செய்தால், தனிப்பட்ட
தகவல்களை அல்லது அப்டேட்டுகளை எளிதாக செய்துவிடலாம் எனக்
கூறுகின்றனர். முன்னெச்சரிக்கை இல்லாமல் இந்த லிங்குகளை
கிளிக் செய்தால், உடனடியாக
உங்களின் வங்கித் தகவல்கள்
அனைத்தும் மோசடி கும்பலின்
கைகளுக்கு சென்றுவிடும். அவர்கள்
உங்களின் ஒப்புதல் இல்லாமலேயே வங்கிக் கணக்குகளில் இருந்து
பணத்தை எடுக்குமளவிற்கான வித்தைகளை
தெரிந்தவர்களாக இருப்பார்கள். இது குறித்து SBI
வங்கி தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே
பலமுறை ஆன்லைன் மோசடி
குறித்து பாதுகாப்பாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ள SBI, இப்போது
புதிய எச்சரிக்கை ஒன்றை
டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. அதில், ஆன்லைன் மோசடிகள்
அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள SBU, ஹேக்கிங், ஃபிஷ்ஷிங்
மற்றும் பிற மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது
என்பது குறித்த வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா
வைரஸ் பரவலுக்குப் பிறகு
ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகள் செய்யப்படுவது அதிகரித்திருப்பதால், இதனை குறிவைத்து மோசடி கும்பல் கைவரிசை
காட்டி வருவதாக தெரிவித்துள்ள SBI வங்கி, வங்கி
பெயரில் வரும் SMSகள் எதுவாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை
ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. SBI என்ற பெயரில்
போலி எஸ்.எம்.எஸ்கள்
அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது,
SBIBNK, SBIINB, SBIPSG மற்றும் SBIYONO ஆகிய
குறியீடுகளின் பெயரில்
வரும் அந்த SMSகள் வங்கி அனுப்புவது அல்ல எனத் தெரிவித்துள்ளது. இந்த மெசேஜ்ஜூக்கு பின்புலத்தில் மோசடி கும்பல் இருக்கலாம் எனவும், இதுபோன்ற SMSகளில் வரும் லிங்குகளை
கிளிக் செய்ய வேண்டாம்
எனவும் வாடிக்கையாளர்களை கேட்டுக்
கொண்டுள்ளது.
அனுப்புநரின் தகவல்களை உறுதிபடுத்த முடியவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை
மையத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், இமெயில்
மூலம் பரிசுகள், சலுகைகள்
வழங்கப்படுவதாக வரும்
மெசேஜை நம்ப வேண்டாம்
என கூறியுள்ள SBI,
யார் ஒருவரிடமும் வங்கி
தொடர்பான தனிப்பட்ட தகவல்கள்,
தொலைபேசி எண்கள், UPI ID மற்றும்
அதற்கான பாஸ்வேர்டை பகிரவேண்டாம் என எச்சரித்துள்ளது.