SBI அப்ரண்டிஸ் பயிற்சி
தேர்வு – ஏப்ரல் மாதம்
நடைபெறும்
இந்தியாவின் பிரபல வங்கியான ஸ்டேட்
பாங்க் ஆஃப் இந்தியாவானது அப்ரண்டிஸ் பயிற்சிக்கான தேர்வு
குறித்த அறிவிப்பை ஏற்கனவே
வெளியிட்டுள்ளது. இந்த
தேர்வுகள் 2021-ம் ஆண்டு
ஜனவரி மாதம் நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த
தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது
இந்த தேர்வுக்கான அறிவிப்பினை ஸ்டேட் பாங்க் ஆஃப்
இந்தியா வெளியிட்டுள்ளது. இதன்படி
அப்ரண்டிஸ் பயிற்சிக்கான தேர்வு
ஏப்ரல் மாதம் நடைபெறும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.sbi.co.in என்ற இணையத்தளம் மூலமாக இது குறித்த விவரங்களை தெரிந்து
கொள்ளலாம்.
இதுகுறித்து SBI
வெளியிட்ட அறிவிப்பின் படி:
SBI
அப்ரண்டிஸ் பயிற்சி தேர்வு
2021 ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்ட நிலையில்
தற்போது அந்த தேர்வுகள்
ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. மேலும்
இதற்கான அட்மிட் கார்ட்
மார்ச் 2021 ஆம் ஆண்டு
வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.