‘மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு மாதிரி தேர்வு வரும் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது’ என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப், 1,2, குரூப்- 4 ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, இவ்வலுவலகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இத்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களின் மூலம் மாதிரி தேர்வுகள் வரும், ஏப்.,19 முதல் நடத்தப்படவுள்ளது.இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 -223555 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.