TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Group 4 பணியிடங்களுக்கு மாதிரி
தேர்வு
தேனி
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசுப் பணியாளா்
தேர்வாணையம் சார்பில் நடைபெறும்
தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வையொட்டி, ஜூலை
20ம் தேதி மாதிரி
தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு
அரசு பணியாளா் தேர்வாணையம் சார்பில் Group 4ல்
அடங்கிய இளநிலை உதவியாளா்,
தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா்,
கிராம நிர்வாக அலுவலா்
காலிப் பணியிடங்களுக்கு ஜூலை
24ம் தேதி போட்டித்
தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு தேனி மாவட்ட வேலை
வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப்
பயிற்சி வகுப்பு நடைபெற்று
வருகிறது.
இந்நிலையில், தொகுதி 4 பணியிடங்களுக்கான தேர்வையொட்டி தேனி மாவட்ட வேலை
வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை
20ம் தேதி முழு
மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
போட்டித்
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் தங்களது
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நகல்,
மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை
சமா்ப்பித்து மாதிரி
தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மாதிரி
தேர்வு எழுத விரும்புவோர் தங்களது பெயா், போட்டித்
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு
எண் ஆகியவற்றை கைபேசி
எண்கள்: 97915 59974, 82207 71597ல்
வாட்ஸ்அப் மூலம் பதிவு
செய்து கொண்டு, மாதிரி
தேர்வில் கலந்து கொள்ள
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here