HomeBlogதமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

 

Salary for part time teachers in Tamil Nadu

தமிழக பகுதிநேர
ஆசிரியர்களுக்கு சம்பளம்
பிடித்தம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள்
அனைவரும் அவ்வப்போது பல
கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு
போராட்டத்தின் விளைவால்
பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.7,700
இல் இருந்து ரூ.10,000
ஆக உயர்த்தி தமிழக
அரசு உத்தரவிட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஊதிய
உயர்வு கடந்த பிப்ரவரி
மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. மேலும் வாரத்தில்
இரண்டு நாட்களாக இருந்த
பணி நாட்களை மூன்று
அரை நாட்களாக மாற்றியமைத்தது. ஆனால் பகுதி நேர
ஆசிரியர்கள் அப்போதும் திருப்தியடையவில்லை. இந்நிலையில், பகுதி
நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு
DPI வளாகத்தில் தர்ணா
போராட்டத்தை கடந்த மாதம்
2
ம் தேதி முதல்
12
ம் தேதி வரை
நடத்தினார்கள்.

பகுதி
நேர ஆசிரியர்களின் இந்த
போராட்டத்தால் தமிழக
அரசு, அவர்களின் சம்பளத்தை
பிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால்,
சென்னையில் நடந்த ஒரு
வார போராட்டத்திற்கு பகுதி
நேர ஆசிரியர்களுக்கான சம்பளம்
பிடித்தம் செய்ய கருவூலத்துறைக்கு பள்ளிக்கு கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதன்படி,
எட்டு நாட்களுக்கு சம்பளம்
பிடித்தம் செய்து அந்த
நிதியை மாவட்ட திட்ட
அலுவலக வங்கி கணக்கில்
செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்
உத்தரவிட்டுள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!