TAMIL MIXER
EDUCATION.ன்
வங்கி செய்திகள்
செப்டம்பர் 30 முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி
மத்திய அரசாங்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதனால், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ATM நிலையங்களில் பல நாட்களாக காத்துக் கிடந்தனர். இந்த சூழலில், ரிசர்வ் வங்கி ரூ.2000 மற்றும் ரூ.200 புதிய நோட்டுகளை வெளியிட்டது.
அந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளாக புதிய ரூ.200, ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.