Sunday, August 31, 2025
HomeBlogதமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

 

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம்மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெற்றி பெற்றால் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக மற்ற அரசியல் கட்சிகளை போல் எதிர்கட்சிகளின் தவறுகளை குறித்து பேசி வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை இல்லை, இது ஒரு உன்னதமான அறிக்கை. நல்ல திட்டங்களை செயல்படுத்துவது மூலமாக தமிழகம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சேர்க்க முடியும்.

மநீம தேர்தல் அறிக்கை:

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்கு உள்ள ரூ.5.60 லட்சம் கோடி கடன் அடைக்கப்படும். இதன் மூலம் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும்.

போக்குவரத்து துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று அதில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குதாரர்களாக மாற்றப்படுவார்கள்.

இல்லத்தரசிகளுக்கு உள்ள திறமைகளை கண்டறிந்து அதனை செயல்படுத்தி ரூ.15,000 வருமானம் ஈட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாவட்டங்களில் ராணுவ கேண்டீன் உள்ளது போல அனைத்து மக்களும் பயன்பெறும் நோக்கில் அனைத்து பொருள்களும் குறைவாக கிடைக்கும் வகையில்மக்கள் கேண்டீன்அமைக்கப்படும்.

விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானத்தை பெருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்கள் அனைத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

சிறு குறு தொழில் செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒரு அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள 50 லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

தனி மனிதரின் ஆண்டு வருமானம் தற்போது இருப்பதை விட 2 மடங்காக உயர்த்தப்படும்.

ஊழியர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருப்பவர்களுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

தனியார் ஊழியர்களுக்கு ரூ.60 ஆயிரம் கிடைக்கும் வரை வருமானம் உயர்த்தப்படும்.

மத்திய அரசு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவது, சமூகநீதி அனைவருக்கும் சமமானதாக கருதப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆசிரியர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் அதிக அளவில் பாடப்பிரிவுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments