HomeBlogபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத் தொகை - திருக்குறள் போட்டி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத் தொகை – திருக்குறள் போட்டி

பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000
பரிசுத் தொகைதிருக்குறள்
போட்டி

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு
அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க மாணவர்களை
ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி
நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.10,000 பரிசுத் தொகை
மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி
குழுவினரால் திறனாய்வு
செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு
தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

போட்டியில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறள்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்து, அதற்கான
திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக
இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

தருமபுரி
மாவட்டத்திலுள்ள பள்ளி
மற்றும் கல்லூரி
மாணாக்கர்கள் தருமபுரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி
இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று
விண்ணப்பிக்கலாம் அல்லது
https://tamilvalarchithurai.com/
என்ற இணையதகளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். ஏற்கனவே
இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு தருமபுரி
மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தைத் தொடர்பு
கொள்ளலாம். நிறைவு
செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.12.2021க்குள் தருமபுரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி
உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கப் பெற
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular