படித்து வேலை
இல்லாதவர்களுக்கு அரசு
வழங்கும் மாதம் ரூ.1,000
உதவித்தொகை
தமிழக
அரசு சார்பில் இளைஞர்களை
ஊக்குவிக்கும் விதமாக
பல்வேறு உதவித் திட்டங்களை செய்து வருகிறது.
அதன்படி
தமிழகத்தில் படித்துவிட்டு வேலை
வாய்ப்பு கிடைக்காத நபர்களை
ஊக்கப்படுத்தும் விதமாக
உதவித்தொகையை வழங்கி
வருகிறது. ஆனால் அரசு
உதவித்தொகை வழங்குகிறது என்பது
பலருக்கு தெரியவில்லை.
எவ்வாறு பெறுவது..?
அதற்கு
யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பதை
தெளிவாக பார்க்கலாம். 10ம்
வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200
வழங்கபடுகிறது. 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300யும், 12ம் படித்தவர்களுக்கு ரூ.400யும்,
பட்டதாரிகளுக்கு ரூ.600
தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம்
வகுப்பு மற்றும் அதற்கு
கீழ் படித்தவர்களுக்கு 600 ரூபாயும்,
மேல்நிலைக்கல்வி தேர்ச்சி
பெற்றவர்களுக்கு 750 ரூபாயும்,
பட்ட படிப்பு முடித்த
நபர்களுக்கு 1000 ரூபாய் அரசால்
வழங்கபடுகிறது.
இந்த
திட்டத்தில் தகுதியுடைய படித்த
வேலை வாய்ப்பு இல்லாத
நபர்கள் உதவி தொகை
பெற விண்ணப்பங்கள் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நீங்கள் பெற்று
கொள்ளலாம். கல்வித் தகுதியினை
வேலைவாய்ப்பகத்தில் பதிவு
செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை
தொடர்ந்து புதுப்பித்து இருக்க
வேண்டியது முக்கியமான ஒன்று. மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு
வருடம் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது.
SC/ST பிரிவினர்
45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு
ரூ.72,000 க்கு மிகையாமல் இருக்க
வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை,
அறிவியல் இது
போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.
இதற்கு
நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப
படிவத்தை பெற்று பூர்த்தி
செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற
சான்றுகளுடன் சேர்த்து
விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


