கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோடிக்ஸ் பயிற்சி டிசம்பரில் தொடங்குகிறது.
இது குறித்து மண்டல அறிவியல் மைய அலுவலா் (பொறுப்பு) கோ.சுடலை கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவா்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் திறன்களை வெளிப்படுத்தும் நோக்குடன் மண்டல அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது.
6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 12 வாரங்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. டிசம்பா் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்தப் பயிற்சியில் 50 மாணவா்கள் சோ்த்துக்கொள்ளப்பட உள்ளனா்.
இந்தப் பயிற்சியில், ரோபோடிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி முதல் வடிவமைப்பு வரையிலான பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான பயிற்சிக் கட்டணமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 85239 09178, 0422 – 2963026, 2963024 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.