HomeBlog1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரொக்கப்பணம்–புதுச்சேரி

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரொக்கப்பணம்–புதுச்சேரி

 

1 முதல் 8ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு அரிசி
மற்றும் ரொக்கப்பணம்புதுச்சேரி

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு கொரோனா
காரணமாக மதிய உணவு
தடைபட்ட நிலையில் மாணவர்களுக்கு அரிசியும், ரொக்கப்பணமும் அடுத்த
வாரத்தில் இருந்து வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
காரணமாக கடந்த மார்ச்
மாதம் முதல் பள்ளிகள்
மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா
தாக்கம் குறைந்து வருவதால்
புதுச்சேரியில் கடந்த
அக்டோபர் மாதம் முதல்
மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. அதே
தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்
ஜனவரி மாதம் முதல்
திறக்கப்பட்டன.

1 முதல்
8
ஆம் வகுப்பு வரை
மாணவர்களுக்கு பள்ளிகள்
தற்போது வரை திறக்கப்படாத காரணத்தால் மதிய உணவு
வழங்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில்
அரிசியும், ரொக்கமும் வழங்கப்பட்டது. அதேபோல் அடுத்த வாரத்தில்
அரிசியும் ரொக்கமும் வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
1
முதல் 5 ஆம் வகுப்பு
வரை உள்ள மாணவர்களுக்கு 10 கிலோ அரிசியும், ரூ.430
ரொக்கமும் வழங்கப்படும்.

அதே
போல் 6 முதல் 8 ஆம்
வகுப்பு வரை உள்ள
மாணவர்களுக்கு 10 கிலோ
அரிசியும், ரூ.600 ரொக்கமும்
வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு
மூலம் 1 முதல் 5 ஆம்
வகுப்பு வரை உள்ள
24
ஆயிரத்து 524 மாணவர்களும், 6 முதல்
8
ஆம் வகுப்பு வரை
உள்ள 18 ஆயிரத்து 828 மாணவர்களும் பயனடைவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular