வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்
தபால்காரர் மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில்
இருந்தபடியே ஆயுள் சான்றிதழ்
சமர்ப்பிக்கலாம் என
கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மத்திய,
மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். கொரோனா
காலத்தில் ஓய்வூதியர் தங்கள்
வீட்டில் இருந்தபடியே ஆயுள்
சான்றிதழை சமர்ப்பிக்க தபால்
துறையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது
இந்தியா போஸ்ட் பேமென்ட்
வங்கி மைக்ரோ ஏ.டி.எம்.,
செயலி மூலம் ‘டிஜிட்டல்
ஆயுள் சான்றிதழ்‘ பெறலாம்.
இச்சான்றிதழ் நேரடியாக
அவர்களுடைய ஓய்வூதியம் வழங்கும்
அலுவலகத்திற்கு ஜீவன்
பிரமான் இணையதளம் மூலம்
சமர்ப்பிக்கப்படும்.
மத்திய
அரசு நவம்பர், டிசம்பரில் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே ஓய்வூதியர்கள் தங்கள்
பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார் எண், அலைபேசி
எண், ஓய்வூதியம் பெறும்
வங்கி கணக்கு எண்,
ஓய்வூதிய அடையாள அட்டை
எண் உள்ளிட்டவை கொடுத்து
‘டிஜிட்டல்
ஆயுள் சான்றிதழ்‘ சேவையை
பெறலாம். இதற்கு கட்டணம்
ரூ.70/-