தமிழகத்தில் மதுபான
கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க
கோரிக்கை
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை
மிக தீவிரமாக இருந்து
வருகிறது. இதன் காரணமாக
தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக
இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து
கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா
தடுப்பூசி வழங்கும் பணிகளும்
தற்போது தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை
குறைப்பதற்கு தமிழக
அரசு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்தது. மேலும்
இந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் வருகிற
ஏப்ரல் மாதம் 10ம்
தேதி முதல் அமலுக்கு
வரவுள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பேருந்துகளில் நின்று பயணம் மேற்கொள்ள
கூடாது, கோவில் போன்ற
புனித ஸ்தலங்களில் திருவிழா
மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை,
கோயம்பேடு சந்தையில் சில்லறை
விற்பனைக்கு தடை போன்ற
விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மதுபான கடைகளில் தற்போது
கூட்டங்கள் அலைமோதி வருகிறது.
இதனாலும் தமிழகத்தில் CORONA பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது. ஆனால்
தமிழக அரசு இன்று
அறிவித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மதுபான கடைகள் கட்டுப்பாடு குறித்த எந்த தகவலும்
இடம் பெறவில்லை. இது
சமூக ஆர்வலர்களிடையே பெரும்
அதிர்ச்சியை கிளப்பியது. மேலும்
தமிழகத்தில் கொரோனா பரவலை
குறைப்பதற்கு மதுபான
கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும்
கோரிக்கை எழுந்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


