Home Blog TNPSC Group 4 தேர்வு அறைக்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும்; காலை 9 மணிக்கு...

TNPSC Group 4 தேர்வு அறைக்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும்; காலை 9 மணிக்கு தேர்வு மையக் கதவுகள் பூட்டப்படும்

0

Reach the TNPSC Group 4 examination hall by 8.30 am; The examination center doors will be locked at 9 am

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்

TNPSC
Group
4
தேர்வு அறைக்கு காலை
8.30
மணிக்குள் வரவேண்டும்; காலை
9
மணிக்கு தேர்வு மையக்
கதவுகள் பூட்டப்படும்

TNPSC Group 4 தேர்வு எழுதுவோர்
இன்று
காலை 8.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு
அறைக்கு வரவேண்டும் என
தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தேர்வாணையக் குழு உறுப்பினா் .வி.பாலுசாமி
தெரிவித்தார்.

தமிழ்நாடு
அரசு பணியாளா் தேர்வாணையத்தின் TNPSC Group 4 பணிகளுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி, அதற்கான
முன்னேற்பாட்டுப் பணிகள்
குறித்த ஆலோசனைக் கூட்டம்,
நாமக்கல் ஆட்சியா் அலுவலக
கூட்டரங்கில் தேர்வாணையக் குழு உறுப்பினா் .வி.பாலுசாமி
தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

பல்வேறு
துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் பணிகளை
விரைந்து மேற்கொள்ள முதல்வா்
உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது TNPSC
Group
4
போட்டித்தேர்வு நடைபெறுகிறது.

இதுவரை
இல்லாத அளவில் 22 லட்சம்
போ எழுதுகின்றனா். நாமக்கல்
மாவட்டத்தில் மட்டும்
TNPSC Group 4 தேர்வினை
191
மையங்களில் 56,223 தேர்வா்கள் எழுத
உள்ளனா். அறை ஒன்றுக்கு
20
தேர்வா்கள் வீதம் தேர்வு
எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை
9.30
மணிக்குத் தொடங்கி 12.30 மணி
வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுகளை எழுதும்
தேர்வா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்கு காலை 8.30 மணிக்குள்
தவறாமல் வந்து விடவேண்டும்.

தேர்வா்களின் புகைப்படம், பெயா், பதிவு
எண் உள்ளிட்ட விவரங்கள்
சரிபார்க்கும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு, காலை
9
மணிக்கு தேர்வு மையக்
கதவுகள் பூட்டப்படும். அதற்கு
முன் வரும் தேர்வா்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு
கண்காணிப்புப் பணிகளில்,
20
தேர்வா்களுக்கு தலா
ஒரு அறைக் கண்காணிப்பாளரும், 191 தேர்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மைக்
கண்காணிப்பாளரும், துணை
ஆட்சியா்கள் நிலையிலான அலுவலா்கள் கொண்ட 16 பறக்கும் படையினரும் ஈடுபட உள்ளனா்.

மேலும்
துணை வட்டாட்சியா்கள் நிலை
அலுவலா்கள் கொண்ட 45 நடமாடும்
குழுவினா் வினாத்தாள்கள் உள்ளிட்ட
தேர்வு பணி பொருள்களை
தேர்வுமையங்களுக்கு கொண்டு
செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய
பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
தேர்வா்கள் மையங்களுக்கு செல்ல
வசதியாக அனைத்து தேர்வு
மையங்களிலும் அரசுப்
பேருந்துகள் நின்று செல்ல
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து
தேர்வு மையங்களிலும் தேர்வரின்
நுழைவுச் சீட்டு எண்,
புகைப்படம் ஒட்டும் பணி
சனிக்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக இத்தேர்வுப் பணியில் 3,500 போ
வரையில் ஈடுபடுகின்றனா்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version