HomeBlogகண்டுபிடிப்புகளில் ஈடுபடும் மாணவர்களை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் – கல்வி உதவி இயக்குனர் வலியுறுத்தல்

கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் மாணவர்களை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் – கல்வி உதவி இயக்குனர் வலியுறுத்தல்

 

கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்
மாணவர்களை 10 சதவீதமாக உயர்த்த
வேண்டும்கல்வி உதவி
இயக்குனர் வலியுறுத்தல்

சென்னையில் வண்டலூர் பி.எஸ்.அப்துர்
ரஹ்மான் உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின், புதுமை
தொழில் ஊக்குவிப்பு மையத்தின்,
இரண்டாம் ஆண்டு துவக்க
விழா நடைபெற்றது. இதில்
அந்நிறுவனத்தின் வேந்தர்
ஆரிப் புகாரி ரஹ்மான்,
துணைவேந்தர் .பீர்முகமது, இணை வேந்தர் அப்துல்
காதிர் புகாரி, பதிவாளர்
.ஆசாத், முதுநிலை
வேளாளர் வி.என்..ஐலால்
மற்றும் இந்த மையத்தின்
தலைமை செயல் அதிகாரி
பர்வேஸ் ஆலம் ஆகியோர்
பங்குபெற்றனர்.

இந்த
விழாவில் கலந்து கொண்ட
மத்திய கல்வி அமைச்சகத்தின் உதவி இயக்குனர் தீபன்
சாகு, கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்
மாணவர்கள் எண்ணிக்கையை 10 சதவீதமாக
உயர்த்த வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும்
அவர் தெரிவித்ததாவது:

நாடு
முழுவதும் 51 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் பயின்று
வரும் 3 கோடி மாணவர்களில் 1 சதவீதம் மட்டுமே சொந்தமாக
தொழில் துவங்குகின்றனர்.

இப்போது
2.25
சதவீதமாக உள்ள இந்த
எண்ணிக்கையை மத்திய அரசின்
ஸ்டார்ட் அப்மற்றும்
மேக் இன் இந்தியா
ஆகிய தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம்
இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக
உயர்த்த வேண்டும். முன்னதாக
கல்வி கற்று கொடுப்பதை
மட்டுமே முக்கியமாக கொண்டிருந்த கல்வி நிறுவனங்கள், தற்போது
வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியும், தொழில் முனைவோர்களை ஊக்குவித்தும் வருகிறது. இந்த நிறுவனம்,
கடந்த ஒரு ஆண்டில்
மட்டும் 75 பேர் புதிய
தொழில் துவங்க ஊக்குவித்து, துணைபுரிந்து சிறந்த
ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இந்திய அளவில் மூன்றாவது
இடத்தை பெற்றுள்ளது பாராட்டத்தக்கது என பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular