குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல்
வளர்ப்பு
குறைந்த
முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு தொழில்
பற்றி காண்போம்.
வளர்ப்புக்கு தேவையான இனங்கள்:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
முதலில்
முயல் வளர்ப்புக்கு ஏற்ற
நல்ல முயல்களை தேர்வு
செய்ய வேண்டும். பொருளாதார
பயன்களை அதிகளவில் பெற
தருந்த இனங்களைத் (வெள்ளை
ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட்
நியூசிலாந்து வெள்ளை
மற்றும் அங்கோரா இனங்கள்)
தேர்வு செய்ய வேண்டும்.
இவற்றில் அங்கோரா இன
முயல்களை வெப்பம் குறைந்த
(15-20◦C) மலைப்பிரதேசங்களில் மட்டும்
வளர்க்க வேண்டும்.
இனப்பெருக்கம் செய்ய பயன்படும் ஆண்
மற்றும் பெண் முயல்கள்
வெவ்வேறு இனமாகவும் ஒரு
வருடத்திற்கு குறைவாகவும் எந்த குறைபாடும் இல்லாத
முயல்களை தேர்வு செய்ய
வேண்டும்.
இடம் மற்றும் குடில் தேர்வு செய்யும் முறை:
குறைந்த எண்ணிக்கையில் உள்ள முயல்களுக்கு ஒற்றை
அடுக்கு கூண்டு அமைப்பே
போதுமானது.
அதிக அளவில்
வளர்க்கும் முயல் பண்ணைகளுக்கு ஒன்று (அ) இரண்டு
அடுக்குள்ள கூண்டு அமைப்புடைய கூடாரங்கள் அமைக்க வேண்டும்.
முயல் வளர்க்கும் குடில்களை அஸ்பெட்டாஸ் (அ)
தென்னங்கீற்று கொண்டு
கூரையை அமைக்க
வேண்டும்.
எந்த விதமான
இரை தேடும் பறவைகளும்
உள்ளே நுழையாதவாறு கூண்டை
அமைக்க வேண்டும்.
வெப்பநிலை 10-30◦செல்ஸியஸ்
அளவும் ஈரப்பதம் 60-70% அளவும்,
வருடம் முழுவதும் உள்ள
இடங்களைத் தேர்வு செய்ய
வேண்டும்.
முயல்களுக்கு சுத்தமான
நீர், மின்சாரம், தீவனங்களை
வழங்குதல், தீவன உணவு,
மருத்துவ உதவி ஆகியவை
அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முயலுக்கும் போதுமான இடம் ஒதுக்க
வேண்டும். நுண்ணுயிர் நீக்கம்
செய்து சுத்தமாகப் பராமரிக்க
வேண்டும்.
வளர்ந்த ஆண்
முயலுக்கு (1.5 * 15 * 1.5) அளவுள்ள
கூண்டும் பெண் முயலுக்கு
(2.0 * 2.5 * 3.0) அளவுள்ள கூண்டும் ஏற்றது.
இதில் தீவனம்
மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு என சிறிய பாத்திரம்
அல்லது கொள்கலன்களை கட்டிட
வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
முயல் வளர்ப்பின் நன்மைகள்:
முயல்கள் அதிகளவில்
இனவிருத்தி செய்யும் தன்மையுடையது.
பலதரப்பட்ட தீவனங்களை
அதிகளவில் உணவாக எடுத்துக்
கொள்வதால் சிறிய தொகையை
முதலீடு செய்து முயல்களை
வளர்க்கலாம்.
ஆரம்ப முதலீடு
மிகவும் குறைவு.
விரைவில் லாபம்
கிடைக்கப் பெறும். முயல்
வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத
காலத்திலிருந்தே லாபம்
பெறலாம்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.


