பிளஸ்1 மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் சார்பில்,
பிளஸ்1 மாணவர்களுக்கு வினாடி–வினா
போட்டிகள், பிப்., 2ம்
தேதி முதல் நடத்தப்படவுள்ளது.
அதற்கான
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக
அரசு பள்ளிகளில், பிளஸ்1
வகுப்பு மாணவர்களின் கற்றல்
திறனை மேம்படுத்தும் வகையில்,
ஹைடெக் லேப் என்ற
கணினி ஆய்வகத்தில், வினாடி–வினா
வகை தேர்வுகள் நடத்தப்பட
உள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வரும்,
பிப்., 2 முதல் 28 ம்
தேதி வரை தமிழ்,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல்,
வேதியியல், வணிகவியல், புவியியல்,
வரலாறு, ஊட்டச்சத்து என
பாடங்களின் பகுதிவாரியாக அறிவியல்,
கலை பிரிவு மாணவர்களுக்கு, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள்,
பிப்., 1ம் தேதி
திறக்க உள்ள நிலையில்,
அன்றுதான் மாணவர்களுக்கு இப்போட்டி
குறித்து தெரிவிக்க இயலும்.
எவ்வித அவகாசமும் இன்றி
போட்டிகள் நடத்துவது ஏற்புடையதல்ல என, சில தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மாணவர்களுக்கு பாடங்கள்
சார்ந்து மட்டும் கேள்விகள்
இருப்பதால், அவர்களுக்கு ஒரு
பயிற்சியாக இருக்கட்டும்.