HomeBlogதமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 

தமிழகத்தில் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான வினா
வங்கிபள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழக
கல்வித்துறை சார்பில் நடப்பு
ஆண்டிற்கான 12ம் வகுப்பு
மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினா
வங்கி மாணவர்களின் கோரிக்கைக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில்
நோய்த்தொற்று காரணமாக
பள்ளிகள் மிகவும் தாமதமாக
தான் தொடங்கப்பட்டது. கடந்த
ஜூலை மாதம் முதல்
மாணவர்களுக்கு ஆன்லைன்
முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. பின்னர் தொற்றின் தாக்கம்
சற்று குறைந்த நிலையில்
ஜனவரி 19ம் தேதி
முதல் பள்ளிகள் நேரடி
வகுப்புகளை தொடங்கியது.

இந்நிலையில் கல்வி ஆண்டில் அதிக
நாட்கள் பள்ளிகள் செயல்படாத
காரணத்தால் மாணவர்களுக்கு பாட
சுமையையும், மனஅழுத்தத்தையும் குறைக்கும் நோக்கில் பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து 30% பாடங்கள்
குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் மே மாதம்
3
ம் தேதி தொடங்க
உள்ளது.

இதனால்
மாணவர்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலான வினா
வங்கிகள் இல்லாமல் தேர்வுக்கு தயாராவதில் சிரமமாக உள்ளதாகவும், விரைவில் வினா வங்கியை
வெளியிட வேண்டும் என்றும்
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக
அரசு, அனைத்து பாடங்களுக்குமான வினா வங்கி புத்தகம்
மற்றும் கணித பாடத்திற்கான தீர்வு புத்தகம் போன்றவற்றை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் விற்பனை செய்கிறது. அந்தந்த
மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள்
வினா வங்கி தொகுப்பை
பெற்றுக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular