பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அட்டவணை வெளியீடு
அரசு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கு
ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு,
முறைகேடுகள் காரணமாக ரத்து
செய்யப்பட்டது. பின்,
நீதிமன்ற உத்தரவின்படி, வரும்
28ம் தேதி முதல்
31 வரை, மீண்டும் தேர்வு
நடத்தப்படுகிறது.இந்த
தேர்வுக்கான பாட வாரியான
அட்டவணை, ஆசிரியர் தேர்வு
வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான, Hall Ticket விரைவில்
வெளியிடப்படும் என,
TRB., தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அரசு பள்ளிகளில் இசை,
ஓவியம், தையல் உள்ளிட்ட
பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர்
தேர்வு, 2017 செப்டம்பரில் நடந்தது.
இதன் முடிவுகள், 2018 June
14-ல் வெளியாகின. இந்த
தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவுக்கு வந்து உள்ளன.
இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் புதிய
பட்டியல், TRB., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி
பெற்றவர்களுக்கு வரும்
23 மற்றும்
24-ல்
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.