
ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 21 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 21- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில், பல்வேறு தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான எழுத, தெரிந்த நபா்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபா்கள் வரை மற்றும் செவிலியா்கள், தையல் கலைஞா்கள், கணினி இயக்குபவா்கள், தட்டச்சா்கள், ஓட்டுநா்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து பணியமா்த்தி வருகின்றனா். இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் பயனடைந்து வருகின்றனா்.
மேலும், திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சிக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனா்.
அதன்படி, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இம்முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ளவா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 86754–12356, 94990– 55942 என்ற கைப்பேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

