
நாமக்கல்லில் ஜூன் 21 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் ‘தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்’ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும். அந்த வகையில், ஜூன் மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேருவதற்கான பதிவும், ஆலோசனையும் வழங்கப்படும். முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இந்த முகாமானது முற்றிலும் இலவசமாகும். மேலும், வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. ஆா்வமுள்ளோா் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

