அங்கன்வாடி, சத்துணவு
திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகளுக்கு முன்னுரிமை
தமிழக
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆணையில், அங்கன்வாடிப் பணியாளர்
மற்றும் அங்கன்வாடி உதவியாளர்
பணியிடங்களுக்கு மாவட்ட
அளவில் சுழற்சி முறையை
கடைப்பிடிக்க வேண்டும்.
அதில்
பணியாளர் மற்றும் நிர்வாகச்
சீர்த்திருத்தத் துறையால்
வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை
மட்டுமே பணியமர்த்த வேண்டும்
என்று ஆணையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
சத்துணவு திட்டத்தின் கீழ்
சத்துணவு அமைப்பாளர், சமையலர்
மற்றும் சமையல் உதவியாளர்
போன்ற பணியிடங்களில் 25% பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


