இமாச்சல பிரதேச மாநிலம் லெப்சாவில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி
ராமர் இருக்கும் இடமே அயோத்தி என கூறப்படுகிறது; என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி.
இந்திய ராணுவம் இருக்கும் இடம், கிட்டத்தட்ட கோயிலுக்கு சமமானது; 140 கோடி இந்தியர்களும் தங்கள் குடும்பம் என்பதை ராணுவ வீரர்கள் அறிவர் – பிரதமர் நரேந்திரமோடி.
கடந்த 35 ஆண்டுகளில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடாத ஒரு தீபாவளி கூட இல்லை.
நான் பிரதமராகவோ, முதல்வராகவோ இல்லாதபோதும் தீபாவளி அன்று எல்லைக்குச் செல்வேன் – பிரதமர் நரேந்திரமோடி.
எல்லையிலுள்ள நாட்டின் வலிமையான சுவர் தாங்கள் தான் என்பதை ராணுவ வீரர்கள் எப்போதும் நிரூபித்துள்ளனர்.
குடும்பத்தை விட்டு எல்லையில் நிற்பது உங்கள் பணியின் உச்சத்தைக் காண்பிக்கிறது; நாட்டை கட்டி எழுப்புவதில் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றனர் – பிரதமர் நரேந்திர மோடி.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow