Friday, August 8, 2025

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாலுமி பயிற்சிக்கான முன்படிப்பு

Preliminaries for sailor training for 10th graders

10ம் வகுப்பு
படித்தவர்களுக்கு மாலுமி
பயிற்சிக்கான முன்படிப்பு

தமிழ்நாடு
அரசின் தன்னாட்சி நிறுவனமான
தமிழ்நாடு கடல்சார் பயிற்சி
நிறுவனம் (Tamilnadu Maritime Academy) இந்தியா
மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களில் பணியாற்றக் கூடிய, ஆறு
மாத (25 வாரங்கள்) கால
அளவிலான, பொதுமுறை மாலுமி
பயிற்சிக்கான முன்
படிப்பு (Pre-Sea Course for General Purpose
Rating)
சேர்க்கைக்கான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

ஆங்கில
வழியில் அளிக்கப்படும் இப்பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன.

தகுதி:

இப்பயிற்சிக்குக் கீழ்க்காணும் ஏதாவதொரு
கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு
அல்லது அதற்கு இணையான
தேர்வில் கணிதம், அறிவியல்
மற்றும் ஆங்கிலப் பாடங்களை
எடுத்துப் படித்திருப்பதுடன் மொத்தம்
40%
மதிப்பெண்களுக்குக் குறையாமல்
எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தில்
40%
மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

பன்னிரண்டாம் வகுப்பில் (+2) ஏதாவதொரு பிரிவில்
அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டு வருட
கால அளவிலான ஏதாவதொரு
பயிற்சியினை முடித்துத் மொத்தம்
40%
மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். பத்தாம்
வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தது
40%
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில்
கணிதம், அறிவியல் மற்றும்
ஆங்கிலப் பாடங்களை எடுத்துப்
படித்திருக்க வேண்டும்

(அல்லது)

அகில
இந்தியத் தொழில்நுட்பக் குழுவால்
(All India Counicil for Techical Education)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனம் வழங்கிய பட்டயம்
(Diploma)
அல்லது ஏதாவது ஒரு
பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். பத்தாம்
வகுப்பில் ஆங்கிலத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்

வயது: இப்பயிற்சியில் சேர்க்கை
பெற விண்ணப்பிப்பவர்களுக்கு 1-7-2021 அன்று
17½
வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு
அதிகமாகாமலும் இருக்க
வேண்டும். பட்டயம் அல்லது
பட்டப்படிப்பு முடித்தவர்கள் 27 வயதுக்கு அதிகமில்லாமல் இருக்க
வேண்டும். எஸ்சி, எஸ்டி
பிரிவினருக்கு ஐந்து
ஆண்டுகளும், இதர பிற்பட்ட
வகுப்பினருக்கு மூன்று
ஆண்டுகளும் வயதுத் தளர்வு
உண்டு. வயதினை உறுதிப்படுத்திடப் பிறப்புப் பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், கடவுச்சீட்டு (Passport) பெற்றிருப்பதுடன் அதன்
நகலும் இணைக்கப்பட வேண்டும்.

மருத்துவத் தகுதி:
இப்பயிற்சிக்குத் தேர்வு
செய்யப்படுபவர்கள் வணிகக்
கப்பல் சட்டம் – 2000 குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக, இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. நிறப் பார்வைக்
குறைபாடுடையவர்களாக இருக்கக்
கூடாது. கண்களில் எந்தவிதமான குறைபாடுகளுமில்லாமல் இருக்க
வேண்டும்.

கட்டணம்: மாணவர் சேர்க்கையின் போது
பயிற்சிக் கட்டணமாக ரூ
1,50,000/- 
ஒரே
தவணையில் செலுத்த வேண்டும்.

பயிற்சியின் சிறப்புகள்:

தேர்வு
செய்யப்பட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி
நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் (Poompuhar
Shipping Corporation Marine Workshop)
தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும்.

தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மும்பையிலுள்ள கப்பல் வணிகத்திற்கான பொது
இயக்குநரகத்தின் (Directorate
General of Shipping)
கீழ் இயங்கும் கடற்பணிகளுக்கான தேர்வு வாரியம் (Board of
Examinations for Seafarers)
நடத்தும் அகில
இந்திய பொது நோக்க
மதிப்பீட்டுப் பயிற்சிக்கான வெளியேற்றப் பயிற்சித் (All India Exit
Examination for General Purpose Rating Course)
தேர்வுகளில் கலந்து
கொள்வதற்கான ஏற்பாடுகளைப் பயிற்சி
நிறுவனமே செய்து தருகிறது.

தேர்ச்சி
பெற்றவர்கள் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Continuous Discharge Certificate –
CDC)
எனும் தகுதிச் சான்றிதழையும் பெற முடியும். இந்தச்
சான்றிதழைக் கொண்டு கடல்
வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிக / கடற்படைப் பணிகளை
எளிதில் பெற முடியும்.
இந்தப் பயிற்சி நிறுவனம்,
இந்தியத் தேசிய கடற்பணியாளர் தரவுதள எண் மற்றும்
தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian National Database of
Seafarers (INDOs) Number and CDC)
பெறுவதற்குத் தேவையான
ஏற்பாடுகளைச் செய்து
தரும். இதற்காகத் தனியாகக்
கட்டணம் எதுவும் செலுத்தத்
தேவையில்லை.

பயிற்சி
நிறைவுக்குப் பின்
36
மாதங்கள் கடல் சார்
பணியில் அனுபவம் பெற்ற
பின்பு வெளிநாடு செல்லும்
கப்பலில் இரண்டாம் துணைப்
பணியாளர் எனும் அலுவலர்
நிலைக்கான தேர்வுகளை எழுத
முடியும். வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற
முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.intnma எனும் இணையதளத்திலிருக்கும் விண்ணப்பபடிவத்தைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக “Tamil Nadu Maritime
Academy”
எனும் பெயரில் தூத்துக்குடியில் மாற்றிக் கொள்ளக்கூடியதாக ரூ.750/-க்கான வரைவோலையினைப் (Demand Draft) பெற்று இணைத்து,
உறையின் மேல் “Application
for admission to GPR Course to be commenced from 03.01.2022”
என்று
குறிப்பிட்டு,

Director,

Tamil Nadu Maritime Academy,

333, South Beach Road,

Thoothukudi – 628 001.

எனும்
முகவரிக்கு 13-12-2022 ஆம்
தேதி மாலை 5.00 மணிக்குள்
சென்றடையும்படி அனுப்பி
வைக்க வேண்டும்.

மாணவர் தேர்வு:
இப்பயிற்சிக்குத் தமிழ்நாடு
அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பத்தாம்
வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில்
பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு பயிற்சிக்கான 40 மாணவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடியில் நடைபெறும் எழுத்துத்
தேர்வுக்குத் தேர்வு
செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனியாக
அழைப்புகள் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 03-01-2022 முதல்
பயிற்சிகள் தொடங்கும்.

tnma1998@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது தூத்துக்குடியிலுள்ள கடல் சார்
பயிற்சி நிறுவன அலுவலகத்தின் 0461 – 2320075, 2904500, 2902667 எனும்
தொலைபேசி எண்களிலோ தொடர்பு
கொண்டும் தகவல்களைப் பெற்றுக்
கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 13-12-2021

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Management Industrial Trainees பணிக்கு Walk-IN வாய்ப்பு! 💼📊

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 2025-இல் Management Industrial Trainees பணிக்கு Walk-IN Interview. CA/CMA தகுதி. சம்பளம் ₹25,000 – ₹30,000. நேர்காணல் தேதி: 19.08.2025.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Graduate Apprentice பணிக்கு Walk-IN வாய்ப்பு! 💼🎓

Bengaluru-வில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 2025-இல் Graduate Apprentice பணிக்கு Walk-IN Interview. B.Com/BBA தகுதி. சம்பளம் ₹12,500. நேர்காணல் தேதி: 13.08.2025.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.50,000 சம்பளத்தில் வாய்ப்பு! 🎓📚

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. M.Sc/MA/PhD தகுதி. சம்பளம் ₹50,000. கடைசி நாள்: 14.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓📄

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. ME/M.Tech தகுதி. சம்பளம் ₹25,000. கடைசி நாள்: 25.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓🔬

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. M.Sc/ME/M.Tech தகுதி. சம்பளம் ₹31,000. கடைசி நாள்: 20.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate-II பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓💼

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II பணிக்கு 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு. BE/B.Tech தகுதி. சம்பளம் ₹28,000 – ₹35,000. கடைசி நாள்: 18.08.2025.

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 188 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🏦

சென்னை கூட்டுறவு வங்கியில் 188 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

அரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 28 உதவியாளர் பணியிடங்கள் வெளியானது! 💼🎓

அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 28 Assistant பணியிடங்கள் 2025-இல் வெளியானது. ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

Related Articles

Popular Categories