HomeBlogதமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு

தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு

 

தமிழக மின்சாரா
வாரிய உதவி பொறியாளர்
தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்
CORONA நோய்த்தொற்று மக்களை
மிக கடுமையாக பாதித்து
வருகிறது. CORONA காரணமாக
தமிழகத்தில் பல தரப்பு
மக்கள் தங்களது வேலை
மற்றும் வாழ்வாதாரத்தையே இழந்தனர்.

மேலும்
கடந்த ஆண்டு கொரோனா
பரவல் காரணமாக அரசு
தரப்பில் நடத்தப்பட வேண்டிய
அனைத்து தேர்வுகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால்
அரசு பணிக்காக காத்திருந்தவர்கள் அனைவரும் ஏமாற்றம்
அடைந்தனர்.

கடந்த
ஆண்டில் தமிழக மின்
வாரியத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில்
400,
மெக்கானிக்கல் பிரிவில்
125
மற்றும் சிவில் பிரிவில்
75
என மொத்தம் 600 உதவி
பணியாளர்கள் பணியிடம் காலியாக
இருந்த நிலையில் இதில்
பணியாளர்களை அமர்த்த வாரியம்
முடிவு செய்தது. இதற்கு
சுமார் 1 லட்ச இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த
ஆண்டு அதற்கான விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால் கடந்த
ஆண்டு CORONA காலம்
என்பதால் தேர்வினை நடத்த
முடியவில்லை.

இதன்
காரணமாக இந்த தேர்வை
வருகிற ஏப்ரல் 24,25 மற்றும்
மே 1,2 ஆகிய தேதிகளில்
நடத்த திட்டமிட்டனர். ஆனால்
மே 1 தொழிலாளர் தினர்
மற்றும் மே 2 சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை
இதன் காரணமாக இந்த
இரு நாட்களின் தேர்வை
ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்து வருவதால்
பல கட்டுப்பாடு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதன்
காரணமாக இந்த மாத
இறுதியில் நடக்கவிருக்கும் தேர்வையும் தள்ளிவைக்க தமிழக மின்
வாரியம் திட்டமிட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular