Sunday, August 10, 2025
HomeBlogஇந்திய ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி

இந்திய ராணுவ
ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்புகொரோனா எதிரொலி

இந்திய
ராணுவத்தில் 16 வயது முதல்
21
வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
ஏற்பாடுகள் நாடு முழுவதும்
செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள கடலூர், வேலூர்,
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை,
திருநள்ளார், விளிப்புறம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டம் ஆகிய 11 மாவட்டங்களில் சென்னை தலைமை ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு இந்திய
ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
கடந்த பிப்ரவரி 10 முதல்
26
ம் தேதி வரை
திருவண்ணாமலை அருணை
பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

ராணுவ
வீரர் தொழில்நுட்பம், ராணுவ
வீரர் உதவி செவிலியர்,
ராணுவ வீரர் உதவி
செவிலியர் கால்நடை, ராணுவ
வீரர் எழுத்தர், பண்டகக்
காப்பாளர் தொழில்நுட்பம், ராணுவ
வீரர் பொதுப்பணி, ராணுவ
வீரர் வர்த்தகர் உள்ளிட்ட
பணிகளுக்கு ஆள்சேர்க்க இந்த
பேரணி நடத்தப்பட்டது. இதில்,
தேர்ச்சி பெற்றவர்கள் பொது
நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக பொது
நுழைவுத் தேர்வு ஏப்ரல்
15
ம் தேதி அன்று
நடப்பதாக இருந்தது.

தற்போது
கொரோனா பரவளின் தாக்கம்
அதிகமாக உள்ளதால் இந்த
பொது நுழைவுத்தேர்வு தள்ளி
வைக்கப்பட்டுள்ளதாக சென்னை
ராணுவப் பிரிவின் மக்கள்
தொடர்பு அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், புதிய தேதிகள்
குறித்து http://www.joinindianarmy.nic.in என்ற
அதிகாரபூர்வ தளத்தில் விவரங்கள்
வெளியிடப்படும். அதன்
பின்னர், சென்னையிலுள்ள ராணுவ
ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புதிய அனுமதி
அட்டையை விண்ணப்பித்தாரர்கள் பெற்றுக்
கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments