நாளை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு
திருப்பூரில் சனிக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறவிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார்
வேலைவாய்ப்பு முகாம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகியன
சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம்
சனிக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில்,
முகாம் நடைபெறும் தேதி
பின்னா் அறிவிக்கப்படும்.