நவ.18 சீா்காழியில் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு
சீா்காழியில் நடைபெறவிருந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வா் டாக்டா் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-ஆவது மாபெரும் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.18-ஆம் தேதி சீா்காழி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முகாம் நடைபெறும் நாள் பின்னா் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow