HomeBlogபோஸ்டல் ஆர்டர் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை - போட்டி தேர்வர்கள் பாதிப்பு

போஸ்டல் ஆர்டர் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை – போட்டி தேர்வர்கள் பாதிப்பு

போஸ்டல் ஆர்டர்
உரிய நேரத்தில் கிடைப்பதில்லைபோட்டி தேர்வர்கள் பாதிப்பு

காவலர்
சீருடை பணியாளர் தேர்வாணையம், பொதுத்துறை வங்கி, TNPSC.,
நீதித்துறை உள்ளிட்ட அரசுத்துறை தேர்வுகளுக்கு மாவட்டத்தில் இருந்து அதிகமானவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

இதற்கு
தேவையான கட்டணத்தை போஸ்டல்
ஆர்டர் முறையில் செலுத்துகின்றனர்.தபால் துறையுடன்
பொதுத்துறை நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் போஸ்டல்
ஆர்டர் படிவம் முறையே
ரூ.10 முதல் ரூ.500
வரை விற்பனையாகிறது.

மாவட்டத்தில் போடி, பெரியகுளத்தில் இயங்கும்
முதன்மை தபால் நிலையங்களை தவிர பிற தபால்
நிலையங்களில் போஸ்டல்
ஆர்டர் படிவங்கள் அதிகப்படியாக கையிருப்பு வைக்கக்கூடாது என
உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால்
அடிக்கடி படிவங்கள் தீர்ந்துவிடுகிறது. இதையடுத்து தேனி,
ஆண்டிபட்டி, சின்னமனுார் தபால்
நிலையங்களுக்கு வருவோருக்கு போஸ்டல் ஆர்டர் உரிய
நேரத்தில் கிடைப்பதில்லை. போட்டி
தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதனை
தவிர்க்க தபால் நிலையங்களில் போஸ்டல் ஆர்டரை கையிருப்பு வைக்க மாவட்ட தபால்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular