அஞ்சலக காப்பீட்டு திட்டங்கள் நாளை முகவர்
பணி நேர்காணல்
பொள்ளாச்சி அஞ்சல் கோட்டத்தில், சேமிப்பு
மற்றும் காப்பீட்டு திட்டங்களுக்கான நேரடி முகவர் பணிக்கு
நாளை (24ம் தேதி)
நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்திய
அஞ்சல் துறையில், அனைத்து
தபால் நிலையங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு ஆயுள்
காப்பீடு மற்றும் கிராமிய
ஆயுள் காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகிறது.
சேமிப்புடன் கூடிய பாதுகாப்பு திட்டங்களான இவை, பொள்ளாச்சி அஞ்சல்
கோட்டத்திலும் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க,
அஞ்சல் துறை நேரடி
முகவர்களை நியமிக்கிறது. நடப்பு
நிதியாண்டில் முகவர்
நியமனத்துக்கு, நாளை
நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள், பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட
அலுவலகத்துக்கு வயதுச்
சான்று மற்றும் கல்விச்
சான்றுகளுடன் நேரடியாக
வந்து, நேர்காணலில் பங்கேற்கலாம்.
இத்தேர்வில் பங்கேற்க, குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10ம் வகுப்பு. வயது
வரம்பு, 18 முதல், 60 வயது
வரை. அங்கன்வாடி ஊழியர்கள்,
முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு
பெற்ற ஆசிரியர்கள், வேலை
தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம்.ஆயுள் காப்பீட்டு துறையில்,
முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு, 04259 224866 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.