அஞ்சல்துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 1.ஆம் தேதி
நேர்காணல்
அரக்கோணம்
அரசு மருத்துவனை அருகில்
உள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல்
ஆயுள் காப்பீடு மற்றும்
ஊரக அஞ்சல் ஆயுள்
காப்பீடு விற்பனை முகவர்
பணிக்கான நேர்காணல் நடக்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு பிப்ரவரி 1.ஆம் தேதி
நேர்முக தேர்வில் பங்குபெற
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணம்
அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு
மற்றும் ஊரக அஞ்சல்
ஆயுள் காப்பீடு முகவர்
பணி காலியாக உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10.ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது
வரம்பு 18 வயதிலிருந்து 50 வயது
வரை ஆகும்.
வேலை இல்லாதவர்கள், படித்த இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஏஜெண்டுகள், முன்னாள் படைவீர்ர், அங்கன்வாடி பணியாளர்கள், மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவிக் குழு நிர்வாகிகள், கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும், மேலும் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் தங்களது சுயவிவரம் குறித்த சான்றிதழ், வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் அவைகளின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும்.