TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு
பொங்கல்
போனஸ்
அறிவிப்பு
2021-2022ம் ஆண்டிற்கான ‘C‘ மற்றும் ‘D‘ பிரிவு பணியாளர்களுக்கான
மிகை
ஊதியம்
மற்றும்
‘C‘
மற்றும்
‘D‘
பிரிவைச்
சார்ந்த
ஓய்வூதியதாரர்கள்,
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
முன்னாள்
கிராம
அலுவலர்களுக்கு
பொங்கல்
பரிசு
வழங்கிட
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நலத் திட்டங்களுக்கு,
அச்சாணியாக
விளங்கும்
அரசு
ஊழியர்கள்,
ஆசிரியர்கள்,
ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு
எதிர்வரும்
பொங்கல்
பண்டிகையை
முன்னிட்டு,
மிகை
ஊதியம்
மற்றும்
பொங்கல்
பரிசு
வழங்கிட
தமிழக
முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, ‘C‘ மற்றும் ‘D‘ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
ரூ.
3,000 என்ற
உச்சவரம்பிற்குட்பட்டு
மிகை
ஊதியம்
வழங்கப்படும்.
தொகுப்பூதியம்,
சிறப்புக்
கால
முறை
ஊதியம்
பெறும்
பணியாளர்கள்,
மற்றும்
நிதியாண்டில்
குறைந்தபட்சம்
240 நாட்கள்
அல்லது
அதற்கு
மேலாக
பணிபுரிந்து
சில்லறை
செலவினத்தின்
கீழ்
மாத
அடிப்படையில்
நிர்ணயிக்கப்பட்ட
ஊதியம்
பெறும்
முழுநேர
மற்றும்
பகுதி
நேரப்
பணியாளர்கள்
ஆகியோருக்கு
ரூ.
1,000 சிறப்பு
மிகை
ஊதியம்
வழங்கப்படும்.
‘C‘ மற்றும் ‘D‘ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்,
முன்னாள்
கிராம
பணியமைப்பு
(முன்னாள்
கிராம
அலுவலர்கள்,
கிராம
உதவியாளர்கள்)
மற்றும்
அனைத்து
வகை
தனி
ஓய்வூதியதாரர்கள்
ஆகியோருக்கும்
ரூ.
500 பொங்கல்
பரிசாக
வழங்கப்படும்.
இந்த
மிகை
ஊதியம்
/ பொங்கல்
பரிசு
வழங்குவதன்
மூலம்
அரசிற்கு
221 கோடியே
42 லட்சம்
ரூபாய்
செலவு
ஏற்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


