HomeNewslatest newsபொங்கல் 2026: 9–14 வரை 34,087 Special Buses | TN Transport Update 🚌🔥

பொங்கல் 2026: 9–14 வரை 34,087 Special Buses | TN Transport Update 🚌🔥

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 2026 தைப் பொங்கல் காலத்தில் 34,087 சிறப்பு & வழக்கமான பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 🎉🚌


  • பண்டிகை: தைப் பொங்கல் 2026
  • சிறப்பு பேருந்து இயக்கம்: 09.01.2026 – 14.01.2026
  • மொத்த பேருந்துகள்: 34,087
  • முன்பதிவு: Online / App / WhatsApp
  • திரும்பும் பயணம்: 16.01.2026 – 19.01.2026

🏛️ முழு விவரம்

2026 தைப் பொங்கலை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சிவசங்கர் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர், மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

🚌 சென்னையிலிருந்து (9–14 ஜனவரி)

  • தினசரி வழக்கமான பேருந்துகள்: 2,092
  • சிறப்பு பேருந்துகள்: 10,245
  • பிற ஊர்களிலிருந்து: 11,290
  • 👉 மொத்தம்: 34,087 பேருந்துகள்

🔄 பொங்கல் முடிந்த பின் (16–19 ஜனவரி)

  • சென்னைக்கு திரும்ப: 15,188 பேருந்துகள்
  • பிற முக்கிய ஊர்களுக்கு: 9,820 பேருந்துகள்
  • 👉 மொத்தம்: 25,008 பேருந்துகள்

🚦 போக்குவரத்து நெரிசல் தவிர்க்க அறிவுரை

சென்னையிலிருந்து கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்லும் பயணிகள்:

  • தாம்பரம் – பெருங்களத்தூர் வழியை தவிர்த்து
  • 👉 திருப்போரூர் / கேளம்பாக்கம் / செங்கல்பட்டு / வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🎫 முன்பதிவு வசதிகள்

  • 📍 கிளாம்பாக்கம் & கோயம்பேடு பேருந்து நிலையங்கள்
  • காலை 7 மணி – இரவு 9 மணி (9–14 ஜனவரி)
  • 🏢 11 முன்பதிவு மையங்கள்

Online Booking:

  • 🌐 www.tnstc.in
  • 📱 TNSTC Official App
  • 💬 WhatsApp: 9444018898

🚌 “Know Your Bus” வசதி மூலம் பேருந்து நடைமேடை விவரங்களை 1 மணி நேரத்திற்கு முன் அறிந்து கொள்ளலாம்.


⚠️ அதிக கட்டணம் வசூல் புகார்?

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தொடர்பு கொள்ள:

  • 📞 1800 425 6151
  • 📞 044-24749002
  • 📞 044-26280445
  • 📞 044-26281611

🏢 சென்னையில் இருந்து பஸ் இயக்கம் – முக்கிய நிலையங்கள்

ஆந்திரா மார்க்கம் & வழக்கமான சேவைகள்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்

புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மார்க்கங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT)

ECR, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!