HomeBlogபாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன சான்று சரிபார்ப்பு - ஆவணங்களை பதிவேற்றலாம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன சான்று சரிபார்ப்பு – ஆவணங்களை பதிவேற்றலாம்

Polytechnic Lecturer Nomination Certificate Verification - Documents can be uploaded

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன சான்று சரிபார்ப்புஆவணங்களை பதிவேற்றலாம்

அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் புதியவர்களை தெரிவு செய்வதற்கான சான்று
சரிபார்ப்பு நடக்க உள்ளது.

அதற்கான
கூடுதல் ஆவணங்களை 18ம்
தேதிக்குள் பதிவேற்றம் செய்ய
வேண்டும் என்று ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த 2017-2018ம்
ஆண்டில் ஏற்பட்ட காலிப்
பணியிடங்களில் நேரடி
நியமனம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்த
2019
நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதை அடுத்து, ஆன்லைன் மூலம்
பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

அப்போது
அவர்களின் கல்வித் தகுதிக்குரிய சான்றுகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டது. இதற்கான
போட்டித் தேர்வு கடந்த
2021
டிசம்பர் 8ம் தேதி
முதல் 12ம் தேதி
வரை கணினி வழியில்
நடந்தது. இதற்கான முடிவுகள்
வெளியான நிலையில் தற்போது
சான்று சரிபார்ப்பு நடத்த
வேண்டியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதனால்,
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தாங்கள் ஏற்கனவே
பதிவேற்றம் செய்த சான்றுகளுடன் கூடுதலாக, இளநிலை பட்டம்
அல்லது தற்காலிக பட்டம்,
இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண்
சான்று, பட்டப்படிப்பின் சமமான
சான்று, முதுநிலை பட்டச்
சான்று அல்லது தற்காலிக
சான்று, முதுநிலை பட்ட
மதிப்பெண் சான்று, முதுநிலை
பட்டத்துக்கு சமமான
அரசாணை, எம்பில் பட்டச்
சான்று அல்லது தற்காலிக
எம்பில் பட்டச்சான்று, எம்பில்
மதிப்பெண் பட்டியல், அதற்கு
சமமான அரசாணை, முனைவர்
பட்டம், அதற்கு இணையானது
என்பதற்கான அரசாணை நன்னடத்தை
சான்று, அரசு அதிகாரியின் சான்றொப்பமிட்ட நன்னடத்தை
சான்று, ஆசிரியர் பணி
அனுபவ சான்று ஆகியவற்றை
கூடுதலாக பதிவேற்றம் செய்ய
வேண்டும்.

இந்த
சான்றுகள் அனைத்தும் 11ம்
தேதியில் இருந்து 18ம்
தேதிக்குள் ஆசிரியர் தேர்வு
வாரிய இணைய தளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன்படி
பதிவேற்றம் செய்துள்ள சான்றிதழ்களின் உண்மை சான்றுகள் மட்டுமே
சான்று சரிபார்ப்பில் எடுத்துக்கொள்ளப்படும். பதிவேற்றம் செய்யாத
சான்றுகள், புதிய சான்று
அறிவிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. முழுமையான விவரங்கள்
அளிக்கப்படாமல் இருந்தாலோ
அல்லது தவறான தகவல்களை
அளித்து இருந்தாலோ அவர்களின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும்,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய
சான்றுகளை பதிவேற்றம் செய்யாதவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இதுகுறித்து கூடுதல்
விவரம் வேண்டுவோர் 94446 30068, 94446
30028
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். எழுத்து மூலமாக
தொடர்பு கொள்ள விரும்புவோர் trbpolytechnicgrievance19@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலமாக
தொடர்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!