+2
துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
ஆகஸ்ட்
6ஆம் தேதி முதல்
19ஆம் தேதி வரை
நடைபெற உள்ள 12ஆம்
வகுப்பு துணைத் தேர்வுகளை
எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில்
வெளியான பட்டியலின்படி தங்களுக்கு குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத்தேர்வு எழுத
விண்ணப்பித்த 12ஆம்
வகுப்பு மாணவர்களும், ஏற்கனவே
மே மாதம் தேர்வெழுத
விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தங்களுக்கான நுழைவுச்
சீட்டை இன்று (31.07.2021) முதல் பதவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி www.dge.tn.gov.in என்ற
இணையத்தளத்தில் நுழைவுச்
சீட்டுகள் வெளியிடப்பட்டன.