பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ம் தேதி துவங்கப்பட உள்ளது.
தேர்வுக்கு இன்னமும், மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுத்துறை இயக்குனரகம் பல்வேறு வழிகாட்டுதல்களை மாவட்ட கல்வித்துறைக்கு வழங்கி வருகிறது.”மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில், செய்முறைத்தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.
உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத்தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறைத்தேர்வு செய்து கொள்ளச்செய்யலாம்.
செய்முறைத்தேர்வுகளை நடத்துவதற்கு, போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத்தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கலாம்.செய்முறைத்தேர்வுக்கு அரசுத்தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட படிவத்தில், மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு முடிந்த இரண்டு நாட்களுக்கு (மார்ச் 11ம் தேதி) மதிப்பெண்களை அந்தந்த மாவட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதிப்பீடு மதிப்பெண்தேர்வுத்துறை, பிளஸ் 1 மாணவருக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை, மார்ச் 1க்குள் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், அகமதிப்பீடு மதிப்பெண்ணை பதிவு செய்வதற்கான வெற்று பட்டியலை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.செய்முறைத்தேர்வு, வருகைப்பதிவு, இணை செயல்பாடு தொடர்பான அகமதிப்பீடு மதிப்பெண்ணை, மார்ச், 1ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


