HomeBlogதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நடப்பது உறுதி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நடப்பது உறுதி

 

Plus 2 exams are guaranteed to take place in Tamil Nadu

தமிழகத்தில் பிளஸ்
2
தேர்வுகள் நடப்பது உறுதி

தமிழகத்தில் CORONA பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே
நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகள்
கட்டாயம் நடக்கும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி
பொதுத்தேர்வுகள் மே
3
முதல் 21 வரை நடைபெறும்
எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின்
இரண்டாம் அலை வீசிக்கொண்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆனாலும்
மாநில அரசு அறிவித்தபடி மே 3ஆம் தேதியில்
தேர்வுகள் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
கொரோனா பரவல் காரணமாக
தேர்வுகள் நடத்தப்படுமா என்ற
குழப்பங்களும், சந்தேகங்களும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (10.04.2021) பிளஸ்
2
மாணவர்களுக்கு செய்முறை
தேர்வு குறித்த 23 வழிகாட்டு
நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் தேவையான பாதுகாப்புடன் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என
மாநில அரசு சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
தேர்வு எழுதும் அனைத்து
மாணவர்களுக்கும் உடல்
வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்,
கை சுத்திகரிப்பான் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு
வழிகாட்டு நடைமுறைகளை மாநில
அரசு அறிவுறுத்தியுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!