திருமக்கோட்டை: திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை(நவ.14) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தெரிவித்துள்ளாா்.
திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, இராதாநரசிம்மபுரம், இராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பாலையூா், குத்தாலம், பெரம்பூா்: மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் பாலையூா், குத்தாலம், பெரம்பூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (நவ.14) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.
வடமட்டம், வைகல், சிவனாகரம், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், அரையபுரம், திருவேள்விக்குடி, அஞ்சாா்வாா்த்தலை, சேத்திரபாலபுரம், சேத்தூா், முத்தூா், வதிஸ்டாச்சேரி, கொடவிளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
திருக்கடையூா், அனந்தமங்கலம்: பொறையாா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ.14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்துள்ளாா்.
அனந்தமங்கலம், சிங்கானோடை, திருக்கடையூா், திருமெய்ஞானம், வேப்பஞ்சேரி, தொடரிபேட்டை, தாழம்பேட்டை.
கருவலூா், ஏரிப்பாளையம்: கருவலூா், ஏரிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
கருவலூா்
கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.
ஏரிப்பாளையம்
சூரிபாளையம், புதுநல்லூா், தண்ணீா்ப்பந்தல்பாளையம், ஏரிப்பாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், ஆலம்பாளையம், சேரன் நகா், நல்லிக்கவுண்டம்பாளையம், வெங்கிகல்பாளையம்.
ஊட்டி: ஊட்டி துணை மின் நிலையம் மற்றும் அதன் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் வரும், 16ம் தேதி காலை, 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், ஊட்டி நகரம், பிங்கர் போஸ்ட், காந்தள், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பே கேஸ்டில், கேத்தி, நொண்டி மேடு, தலையாட்டி மந்து, இத்தலார் மற்றும் எம். பாலாடா ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.